'கேஜிஎப்' இயக்குனருடன் கைகோர்க்கும் அமீர்கான்... பட்டையை கிளப்பும் அப்டேட் !

'கேஜிஎப்' இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்தியாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக இருப்பவர் பிரசாந்த் நீல். 'கேஜிஎப்' படத்தை இயக்கி இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தார். இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி வெறித்தனமாக சாதனையை படைத்தது. இதனால் பிரசாந்த் நீல் படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகும் 'சலார்' படத்தை இயக்கி வருகிறார். பிரம்மாண்டமாக தயாராகி வரும் இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். இவர்களுடன் பிரபல நடிகர்கள் ஜெகபதி பாபு, பிரித்விராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையடுத்து பிரசாந்த் நீலின் அடுத்த படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இதில் கதாநாயகனாக ஜூனியர் என்டிஆர் நடிக்கிறார். ஜூனியர் என்டிஆர் 31வது படமாக உருவாகும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் இரு நிறுவங்களும் இணைந்து தயாரிக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கானை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இது உறுதியானால் மல்டி ஸ்டார் படமாக இப்படம் உருவாகும் என தெரிகிறது.