வெறித்தனமாக உருவாகும் 'கேஜிஎப் 3'... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம் !

kgf3

'கேஜிஎப் 3' படத்தின் மூன்றாம் பாகம் குறித்து முக்கிய அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

கடந்த 2018-ஆம் ஆண்டு பிரசாந் நீல்  இயக்கத்தில் ராக் ஸ்டார் யாஷின் மிரட்டலான நடிப்பில் உருவான திரைப்படம் 'கேஜிஎப்'. இந்த படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, மாளவிகா அவினாஷ்,. அச்யுத் குமார், ஆனந்த் நாக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கன்னடத்தில் உருவான இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் வெளியானது. 

kgf3

ஹாம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படம் 250 கோடி ரூபாய் வசூலித்தது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் மிகவும் பிரம்மாண்டமாக உருவானது. பல மொழிகளில் வெளியான இப்படம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது. பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டடித்த இந்த படம் சுமார் 1200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. ‌

kgf3

இரண்டு பாகங்களின் வெற்றிக்கு பிறகு இந்த படம் ஐந்து பாகங்களாக குறிப்பிட்ட இடைவெளியில் உருவாகி வெளியாகும் என தகவல் வெளியானது. அதனால் கேஜிஎப் படத்தின் மூன்றாவது பாகம் எப்போது உருவாகும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் 'கேஜிஎப் 2' படம் உருவாகி ஒராண்டு நிறைபெற்றுள்ளது. இதையொட்டி மிரட்டலான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவின் இறுதியில் மூன்றாவது பாகத்திற்கான இன்ட்ரோ கொடுக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Share this story