மலையாள இயக்குநருடன் கூட்டணி அமைக்கும் கேஜிஎஃப் யஷ்?

மலையாள இயக்குநருடன் கூட்டணி அமைக்கும் கேஜிஎஃப் யஷ்?

‘கேஜிஎஃப்’ யஷ் நடிக்கவுள்ள 19-வது படத்தை மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானவர் கீது மோகன்தாஸ். தமிழில் சத்யராஜ் நடித்த ‘என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ படத்தில் சிறுமியாக நடித்திருந்தார். கமல் தயாரிப்பில் மாதவன் நடித்திருந்த ‘நளதமயந்தி’ படத்தில் நாயகியாக நடித்தார். இது தவிர மலையாளத்தில் ஏராளமான திரைப்படங்களில் நடித்த அவர், இந்தியில் நவாசுதீன் சித்திக் நடித்த ’லயர்’ஸ் டைஸ்’ படத்தை இயக்கியிருந்தார். இப்படம் இரண்டு தேசிய விருதுகளை வென்றது. கடைசியாக நிவின் பாலி நடிப்பில் ‘மூத்தோன்’ என்ற படத்தை அவர் இயக்கினார். இந்நிலையில், கேஜிஎஃப் புகழ் யஷ் நடிக்கும் 19-வது படத்தை கீது மோகன்தாஸ் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆக்‌ஷன் திரைப்படமாக இல்லாமல், அழுத்தமான கதைக்களத்தை கொண்ட படமாக இது அமையும் என தகவல் வெளியாகியுள்ளது. 

Share this story