ஓ.டி.டி.க்கு வரும் குஷி.... அக்டோபர் 1-ம் தேதி ரிலீஸ்...

ஓ.டி.டி.க்கு வரும் குஷி.... அக்டோபர் 1-ம் தேதி ரிலீஸ்...

சமந்தா, விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள குஷி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஷிவா நிர்வானா இயக்கத்தில் பான் இந்திய படமாக வெளியான திரைப்படம் குஷி. படத்தில் விஜய் தேவரகொண்டா நாயகனாக நடிக்க, சமந்தா நாயகியாக நடித்திருந்தார். படத்தில், ரோகினி, முரளி சர்மா, சரண்யா பொன்வண்ணன், ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 

ஓ.டி.டி.க்கு வரும் குஷி.... அக்டோபர் 1-ம் தேதி ரிலீஸ்...

இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் அக்டோபர் மாதம் 1-ம் தேதி நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

Share this story