‘பிரச்சாரம் செய்வேன் ஆனால், கட்சியில் சேர மாட்டேன்’ – நச் பேட்டி கொடுத்த நடிகர் கிச்சா சுதீப்.

photo

பாஜக குறித்து  நடிகர் கிச்சா சுதீப் அளித்துள்ள பேட்டி தற்போது வைரலாக பரவி வருகிறது.

photo

கர்நாடக சட்டபேரவையின் 224 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்  காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே பிரதான போட்டி நிலவிவருகிறது. இந்த நிலையில்  பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.

photo

அது குறித்து நடிகர் கிச்சா கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையுடன் செய்தியாளர்களைச் சந்தித்தார்அப்போது அவர் கூறியதாவதுபிரச்சாரம் மட்டுமே செய்யவுள்ளேன். கட்சியில் நான் இணையவில்லை.  எனக்கும் முதல்வருக்கும் நெருங்கிய உறவு இருந்து வருகிறது. அவர் என் மாமாவைப் போன்றவர். ஆரம்ப காலத்தில் அவர் என் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்என் வாழ்க்கையில் பல உதவிகளை செய்துள்ளார். அவருக்காக மட்டுமே நான் இதை செய்கிறேன். கட்சிக்காக அல்ல. அவர் நலனுக்காக பாஜகவுக்கு பிரச்சாரம் செய்யவுள்ளேன் ஆனால், கட்சியில் இணையவோ, தேர்தலில் போட்டியிடவோ மாட்டேன்என நச் பதிக் கொடுத்துள்ளார் கிச்சா சுதீப். தொடர்ந்து பேசிய பசவராஜ் பொம்மைஅவர் எனக்கு ஆதரவளித்துள்ளார். அதனால் அவர் பாஜகவை ஆதரிக்கிறார் என்று அர்த்தம். கிச்சா சுதீப் மிகவும் பிரபலமானவர். அது பாஜகவுக்கு பலமாக அமையும். தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்” என கூறினார்

Share this story