'கிச்சா 47' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இயக்குநர் யார் தெரியுமா?

photo

நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் தயாராகவுள்ள அவரது 47வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கிச்சா பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது.

photo

கோலிவுட்டில் தவிர்க்க முடியாத இயக்குநர் சேரன். குறிப்பாக 90ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த இயக்குநர் அவர். இவர் கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு ‘திருமணம்’ படத்தை இயக்கினார், அதன் பின்னர் 4 ஆண்டுகளாக எந்த படத்தையும் இயக்கவில்லை. இந்த நிலையில் மீண்டும் இயக்கத்தில் களமிறங்கியுள்ளார் சேரன். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் கிச்சா சிதீப் நடிக்கும் அவரது 47வது படத்தை இயக்க உள்ளார். இந்த படம் கன்னட மொழியில் உருவாகவுள்ளது.

photo

படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டருடன் வெளியாகியுள்ளது. அதில் உடம்பில் ரத்த கறையுடம் கைகளை இணைத்தவாரு ஒருவர் அமர்ந்துள்ளார். தொடர்ந்து படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர் உள்ளிட்டோர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story