பூனம் பாண்டேவுக்கு நோட்டீஸ் அனுப்பிய கொல்கத்தா வழக்கறிஞர்

பூனம் பாண்டேவுக்கு நோட்டீஸ் அனுப்பிய கொல்கத்தா வழக்கறிஞர்

சர்ச்சைக்குப் பெயர் போனவர் பாலிவுட் நடிகை பூனம் பாண்டே. நடிப்பு மட்டுமில்லாது மாடலிங்கிலும் கவனம் செலுத்தி வரும் இவர் சமூக வலைதளங்களில் ஏடாகூடமாகக் கேள்விகளை எழுப்புவது, கவர்ச்சி படங்களை அவ்வப்போது வெளியிடுவது என எப்போதும் பிறரின் கவனத்தை தன்மீது திருப்பி லைம்லைட்டில் வலம் வரக்கூடியவர். ஒரு சமயத்தில் இந்தியா உலகக்கோப்பை வென்றால்  மைதானத்தில் நிர்வாணமாக ஓடுவேன் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். சாம் பாம்பே என்பவரைத் திருமணம் செய்தார். சில தினங்களுக்கு பிறகு, அவர் தன்னை கொடுமைப் படுத்துவதாக அவரே போலீஸில் புகார் அளித்தார். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக அவர் செர்விகல் புற்றுநோய் பாதிக்கப்பட்டு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழததாக பதிவிடப்பட்டது. ஆனால், தான் நலமுடன் இருப்பதாக அவர் மீண்டும் பதிவிட்டார். இதனால், பொய் செய்தியை பரப்பி சமூக வலைதளங்களில் நாடகமாடிய பூனம் பாண்டே மீது வழக்குப்பதிந்து அவரை சிறைக்கு அனுப்ப இணையவாசிகள் வலியுறுத்தினர். 

இந்நிலையில், கொல்கத்தாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் பூனம் பாண்டேவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். 

Share this story