என் ரோஜா நீ... சமந்தாவின் ‘குஷி’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ வெளியீடு !

சமந்தா நடிப்பில் உருவாகும் ‘குஷி’ படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் பாடலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
நடிகை சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா முதல்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘குஷி’. இந்த படம் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளை படக்குழு வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் பாடல் வரும் மே 9-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் பாடலின் ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலுக்கு 'ஹ்ரிதயம்' படத்திற்கு இசையமைத்த ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். காதல் ரொமென்ஸ் படமாக உருவாகும் இந்த படத்தை பிரபல இயக்குனர் சிவ நிர்வணா இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் ஜெயராம், சச்சின் கெடகர், முரளி ஷர்மா, லக்ஷ்மி, அலி, ரோகிணி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.