மூன்றே நாட்களில் இத்தனை கோடியா!........- கல்லாகட்டும் ‘குஷி’.

photo

சமந்தா, விஜய் தேவரகொண்டா இணைந்து நடித்து வெளியான ‘குஷி’ படத்தின் மூன்று நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

photo

ஷிவா நிர்வானா இயக்கத்தில் பான் இந்திய படமாக வெளியான இந்த படத்தின் மூன்று நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான குஷி படம் முதல் நாள் வசூல் உலகம் முழுவதும் 30 கோடி  என தகவல் வெளியான நிலையில் தற்போது உலகம் முழுவதும் மூன்று நாட்களில் குஷி படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் போஸ்டருடன் வெளியாகியுள்ளது.

அதன்படி படம் மூன்று நாட்களில் 70.23 கோடிகளை கடந்துள்ளது. இதே வேகத்தில் சென்றால் விரைவில் படம் 100 கோடி கிளப்பில் இணைந்துவிடும் என ரசிகர்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள குஷி படம் காதல் கதைகளத்தை மைய்யமாக வைத்து உருவாகியுள்ளது. இந்த படத்தில் ரோகினி, முரளி சர்மா, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Share this story