மயில் இறகால் வருடும் ‘ஆராத்யா’... கவனம் ஈர்க்கும் ‘குஷி’ செகண்ட் சிங்கிள் !

kushi

சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ‘குஷி’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. 

விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா இணைந்து நடித்துள்ள காதல் காவியம் ‘குஷி’. இந்த படத்தில் ஜெயராம், சச்சின் கெடகர், முரளி ஷர்மா, லக்ஷ்மி, அலி, ரோகிணி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். 

Aradhya

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளது. வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தை முன்னணி இயக்குனர் சிவ நிர்வணா இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்திற்கு 'ஹ்ரிதயம்' படத்திற்கு இசையமைத்த ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்து வருகிறார்.

Aradhya

வித்தியாசமான காதல் ரொமென்ஸ் படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘ஆராத்யா’ என்ற லிரிக்கல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. மதன் கார்கி எழுதியுள்ள இந்த பாடலை சித் ஸ்ரீராம் மற்றும் சின்மயி இணைந்து பாடியுள்ளனர். 

Aradhya

திருமணத்திற்கு பிறகான நாயகனுக்கும், நாயகிக்கு இடையேயான மாயாஜால காதல் பாடலாக இப்படம் உருவாகியுள்ளது. “நீ என் சூரிய ஒளி.. நீ வானத்தில் நட்த்திரங்கள்... இப்போது என்னுடன் வா உனக்கு என் ஆசை.. என்று குஷியின் காதல் உலகத்திற்கு இந்த பாடல் கொண்டு செல்கிறது. மொத்தத்தில் இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளளது. 

 

Share this story