“ஆஹா…இது அதுல்ல…….”- குஷி’ படத்தின் டிரைலர் இதோ.

photo

இயக்குநர் சிவ நிர்வணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா இணைந்து நடித்துள்ள  திரைப்படம்குஷி’. காதல் ரொமென்ஸ் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளனர். 'ஹ்ரிதயம்' படத்திற்கு இசையமைத்த ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் படத்தில் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

செப்டம்பர் 1ஆம் தேதி தமிழ், மலையாளம் ,கன்னடம், இந்தி, தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் படம்  வெளியாகவுள்ளது. இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள டிரைலரில் முஸ்லீமாக வரும் சமந்தா பின்னர் தான் பிராமின் என கூற பெற்றோரின் சம்மதம் இல்லாமல் சமந்தாவும், விஜய்யும்  திருமணம் செய்துகொண்டு வாழ்கின்றனர். அந்த வாழ்வில் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கின்றனர் என டிரைலரின் மூலம் தெரிகிறது. இந்த டிரைலரை பார்த்த பலரும்  கிட்டதட்ட படம் ஜெய், நஸ்ரியா நடித்த 'திருமணம் எனும் நிக்கா' போல உள்ளதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Share this story