இத்தாலியில் பிரமாண்டமாக நடைபெறும் லாவண்யா - வருண் தேஜ் திருமணம்

இத்தாலியில் பிரமாண்டமாக நடைபெறும் லாவண்யா - வருண் தேஜ் திருமணம்

தமிழில் சசிகுமாரின், 'பிரம்மன்' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் லாவண்யா. தொடர்ந்து, 'மாயவன்' என்ற படத்தில் நடித்தார்.

தெலுங்கில் பெரும்பாலான படங்களில் நடித்து வரும் இவரும், நடிகர் வருண் தேஜும் காதலித்து வந்தனர். இருவரும் 'அந்தாரிக்‌ஷம்' என்ற படத்தில் நடித்த போது காதலிக்கத் தொடங்கி இருக்கின்றனர். இவர்கள் காதலுக்கு இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து சில மாதங்களுக்கு முன் ஆந்திராவில் நிச்சயதார்த்தம் நடந்தது.

இத்தாலியில் பிரமாண்டமாக நடைபெறும் லாவண்யா - வருண் தேஜ் திருமணம்

திருமணத்துக்கு முந்தைய விருந்து நிகழ்ச்சி சில நாட்களுக்கு முன் ஹைதராபாத்தில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் நடைபெற்றது. இந்நிலையில் இவர்கள் திருமணம் இத்தாலியில் நடக்க இருப்பதாக தெரிய வந்துள்ளது. அங்குள்ள டசுக்கனி நகரில் உள்ள சொகுசு ரிசார்ட் ஒன்றில் நவம்பர் 1-ம் தேதி திருமணம் நடைபெறுகிறது. 3 நாட்கள் நடக்கும் இந்தத் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துகொள்கின்றனர்.

Share this story