திரையரங்குகளில் வெளியானது காதல் தி கோர்
தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தை இயக்கி பிரபலமான இயக்குநர் ஜியோ பேபி இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ‘காதம் தி கோர்’. இந்த படத்தை மம்முட்டியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான மம்முட்டி கம்பெனி மற்றும் வேஃபேரர் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். படத்திற்கு மேத்யூஸ் புலிகன் இசையமைத்துள்ளார். சாலு கே தாமஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஜோதிகா மீண்டும் மலையாள திரைப்படத்தில் நடிப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்படத்தில் நடிகர் மம்மூட்டி ஓரினச் சேர்க்கையாளராக நடித்திருப்பதாக கூறி படத்தை வெளியிட ஒரு சில நாடுகளில் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், காதல் தி கோர் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. கேளராவில் அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் படம் வெளியாகி இருக்கிறது.