தெலுங்கிற்கு சென்ற 'லவ் டுடே' நாயகி... குவியும் வாய்ப்புகள் !

ivana

'லவ் டுடே' படத்தின் மூலம் பிரபல நடிகை இவானா தற்போது தெலங்கு சினிமாவிலும் அறிமுகமாகிறார். 

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக இருப்பவர் இவானா. பாலாவின் 'நாச்சியார்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன்பிறகு சிவகார்த்திகேயனின் 'ஹீரோ: படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படி இவானா நடித்த சில படங்கள் அவருக்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.

ivana

இதையடுத்து சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த 'லவ் டுடே' படத்தில் கதாநாயகியாக இவானா நடித்திருந்தார். இந்தப் படத்தின் மூலம் ஓவர் நைட்டில் மிகவும் பிரபலமான கதாநாயகியாக இவானா மாறிவிட்டார். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு கிரிக்கெட் வீரர் தோனி தயாரிக்கும் 'எல்ஜிஎம்' படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் ‌ 

குறுகிய காலத்தில் பிரபலமாகிவிட்ட இவானா, தற்போது தெலுங்கு படம் ஒன்றில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.  ‌'வாரிசு' படத்தின் தயாரிப்பாளர் தில் மற்றும் இயக்குனர் சுகுமார் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றனர். இந்த படத்தில் கதாநாயகனாக இளம் நடிகர் ஆசீஸ் நடிக்கிறார். இவர் தயாரிப்பாளர் தில் ராஜூவின் உறவினர் ஆவார். காசி விஷால் இப்படத்தை இயக்குகிறார். 'செல்பிஸ்' என்ற தலைப்பில் உருவாகும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

Share this story