400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ‘லூசிபர் 2’... படப்பிடிப்பு தயாராகும் மோகன்லால் !

prithiviraj

 மோகன்லால் நடிப்பில் உருவாகும் ‘லூசிபர் 2’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் மாபெரும் வெற்றிப்பெற்ற திரைப்படம் ‘லூசிஃபர்’. இந்த படத்தில் மோகன்லால் அரசியல்வாதியாகவும், அண்டர்கிரவுண்ட் கேங்ஸ்டராகவும் நடித்திருந்தார். அரசியல் த்ரில்லர் படமாக உருவான இப்படத்தை பிரபல நடிகரும், இயக்குனருமான பிரத்விராஜ் இப்படத்தை இயக்கியிருந்தார். 

prithiviraj

இந்த படத்தில் விவேக் ஓபராய், மஞ்சுவாரியர், பிரத்விராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. இதையடுத்து இப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானது. அதேபோன்று தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் ‘காட்பாதர்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. 

இதைத்தொடர்ந்து லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம் ‘எம்புரான்’ என்ற தலைப்பில் உருவாகும் என கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை முதல் பாகத்தை தயாரித்த ஆசிர்வாத் சினிமாஸ்தான் இந்த படத்தையும் தயாரிக்கவுள்ளது. இந்நிலையில் ‘எம்புரான்’ படத்தின் பணிகளை இயக்குனர் பிரத்விராஜ் தொடங்கியுள்ளது. இந்த படத்திற்காக தற்போது லண்டனில் லோகேஷன் பார்க்கும் பணியில் தீவிரமாக அவர் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து விரைவில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளதாக பிரத்விராஜ் தெரிவித்துள்ளார். 

Share this story