20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் மாதவன், ஜோதிகா ஜோடி

20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் மாதவன், ஜோதிகா ஜோடி

மாதவன், ஜோதிகா, அஜய் தேவ்கன் மூவரும் இந்திய திரையுலகில் பிரபலமான நடிகர்கள். தற்போது இவர்கள் மூவரும் இணைந்து ஒரு பாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளனர். விகாஷ் பால் இயக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார். பெயரிடப்படாத இப்படம் சூப்பர் நேச்சுரல் திரில்லர் திரைப்படமாக உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படம் 2024 ஆண்டு மார்ச் 8ஆம் தேதி வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகியுள்ளது. இப்படத்தின் மூலம் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மாதவனும், ஜோதிகாவும் இணைந்து நடிப்பது உறுதி ஆகியுள்ளது. இதற்கு முன்னதாக தமிழில் ஜோதிகா, மாதவன் இணைந்து டும் டும் டும், பிரியமான தோழி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் மாதவன், ஜோதிகா ஜோடி

Share this story