தமனை தொடர்ந்து வெளியேறிய பிரபல நடிகை.. மகேஷ் பாபு படத்தில் நடைபெறும் கலவரம் !

gundur karam

‘குண்டு காரம்’ படத்திலிருந்து தமன் வெளியேறிய நிலையில் நடிகை பூஜா ஹெக்டேவும் வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ் பாபு மற்றும் பிரபல இயக்குனர் த்ரி விக்ரம் ஸ்ரீனிவாஸ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘குண்டுர் காரம்’. மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்த கூட்டணியின் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

gundur karam

சமீபத்தில் இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இவர்களுடன் ஸ்ரீலீலா, பிரகாஷ்ராஜ், சுனில், ஸ்ரீலீலா, ஜெகபதி பாபு,  ரம்யாகிருஷ்ணன், ஜெயராம், சுனில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

gundur karam

நாக வம்சி தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வந்தார். 100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதி சங்கராந்தியை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இசையமைப்பாளர் தமனுக்கென்னு தனி ஸ்டுடியோ இல்லை. அதனால் தான் இசையமைக்கும் படத்தின் பாடல் கம்போசிங்கிற்காக நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியிருக்கிறார் தமன். இந்த ஓட்டலில் தங்கியிருப்பதற்கு 40 லட்சம் செலவாகயிருப்பதாக தயாரிப்பாளருக்கு பில் அனுப்பியுள்ளார் தமன். இதை பார்த்த தயாரிப்பாளர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

gundur karam

பல படங்களுக்காக பாடல் கம்போசிங் செய்து வரும் தமன், தனது படத்திற்காக மட்டும் 40 லட்சம் அனுப்பியிருப்பது நியாயம் இல்லை. அதனால் அந்த தொகையை தரமுடியாது என்று கூறிவிட்டாராம். இதனால் தமனுக்கும், தயாரிப்பாளருக்கு இடையே மோதல் உருவானது. அதேபோன்று மகேஷ் பாபுவிற்கும், தமனுக்கு இடையேவும் சில கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் படத்திலிருந்து தமன் வெளியேற்றப்பட்டுள்ளார். தமனுக்கு பதிலாக அனிரூத் அல்லது ஜிவி பிரகாஷ் இந்த படத்தில் இசையமைப்பாளராக பணியாற்ற உள்ளனர். 

இந்நிலையில் தமன் வெளியேறி அதிர்ச்சி அடக்குவதற்குள் நடிகை பூஜா ஹெக்டேவும் இந்த படத்திலிருந்து வெளியேறிவிட்டாராம். ஆனால் பூஜா ஹெக்டே வெளியேறியதற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. 

 

Share this story