மகேஷ் பாபுவுடன் கருத்து வேறுபாடு... ‘குண்டுர் காரம்’ படத்திலிருந்து தமன் நீக்கம் ?

gundur karam

மகேஷ் பாபுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ‘குண்டூர் காரம்’ படத்திலிருந்து இசையமைப்பாளர் தமன் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தெலுங்கில் மாஸ் நடிகராக இருக்கும் மகேஷ் பாபு, தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘குண்டூர் காரம்‘. ‘ஆலா வைகுந்தபுரமுலோ’ உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கிய த்ரி விக்ரம் ஸ்ரீனிவாஸ் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் மூலம் மகேஷ் பாபு - த்ரி விக்ரம் கூட்டணி மூன்றாவது முறையாக இணையவுள்ளது. 

gundur karam

இந்த படத்தில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இவர்களுடன் ஸ்ரீலீலா, பிரகாஷ்ராஜ், சுனில், ஸ்ரீலீலா, ஜெகபதி பாபு,  ரம்யாகிருஷ்ணன், ஜெயராம், சுனில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். நாக வம்சி தயாரிக்கும் இந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

gundur karam

100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதி சங்கராந்தியை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு தமன் இசையமைப்பாளராக பணியாற்றி வந்தார். இதற்கிடையே மகேஷ் பாபுவுடன் தமனுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனால் படத்திலிருந்து தமன் நீக்கப்பட்டுள்ளார்.  அதனால் தமனுக்கு பதில் அனிரூத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதனை உறுதிப்படுத்தும் விதமாக தமன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த பதிவும் உள்ளது. ஆனால் படக்குழு தரப்பிலோ, தமன் தரப்பிலோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Share this story