மகேஷ் பாபுவிற்கு ஜோடியாகும் 'வாத்தி' பட நடிகை... பிரபல நடிகை விலகலால் அடித்தது ஜாக்பாட் !

gundur karam

 மகேஷ் பாபு நடிப்பில் உருவாகும் 'குண்டுர் காரம்' படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

பிரபல இயக்குனர் த்ரி விக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகும் திரைப்படம் 'குண்டுர் காரம்'. 100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதி சங்கராந்தியை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது.

gundur karam

இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமான தமன் விலகிவிட்டார். அதேபோன்று இப்படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம். செய்யப்பட்ட பூஜா ஹெக்டேவும் சமீபத்தில் விலகினார். இதற்கு காரணம் கதையில் படக்குழு சில மாற்றங்கள் செய்ததது மற்றும் கால்ஷீட் இல்லாததது தான் காரணம் என கூறப்படுகிறது. 

gundur karam

இந்நிலையில் இப்படத்தில் பூஜா ஹெக்டேவுக்கு பதிலாக 'வாத்தி' படத்தின் கதாநாயகி சம்யுக்தா மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  ‌‌‌‌‌‌‌இந்த படத்தில் இரண்டாவது கதாநாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், சுனில், ஸ்ரீலீலா, ஜெகபதி பாபு, ரம்யாகிருஷ்ணன், ஜெயராம், சுனில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இதற்கிடையே கதாநாயகி மற்றும் இசையமைப்பாளர் பிரச்சனையால் படப்பிடிப்பு தொடங்காமல் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story