மகேஷ் பாபு படத்தில் இருந்து விலகிய அடுத்த பிரபலம்...

maheshbabu

 பிரபல இயக்குனர் த்ரி விக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகும் திரைப்படம் 'குண்டுர் காரம்'. 100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதி சங்கராந்தியை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது.

maheshbabu

இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமான தமன் விலகிவிட்டார். அதேபோன்று இப்படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம். செய்யப்பட்ட பூஜா ஹெக்டேவும் சமீபத்தில் விலகினார். இதற்கு காரணம் கதையில் படக்குழு சில மாற்றங்கள் செய்ததது மற்றும் கால்ஷீட் இல்லாததது தான் காரணம் என கூறப்படுகிறது. 

இந்நிலையில் இப்படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒளிப்பதிவாளர் பிஎஸ் வினோத்தும் விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கால்ஷீட் பிரச்சினையால் அவர் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Share this story