‘அடல் பிஹாரி வாஜ்பாய்’ வாழ்கை வரலாற்று படமான ‘மெயின் அடல் ஹூன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
1701263242931

இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் வாழ்கை வரலாற்று படமாக தயாராகியுள்ள ‘மெயின் அடல் ஹூன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மெயின் அடல் ஹூன் படத்தை தேசிய விருது பெற்ற இயக்குநர் ரவி ஜாதவ் இயக்கியுள்ளார். உத்கர்ஷ் நைதானி படத்தின் கதையை எழுதியுள்ளார். சமீர் பாடல் வரிகள் எழுத அதற்கு சலீம்-சுலைமான் இசையமைத்துள்ளார். பங்கஜ் திரிபாதி வாஜ்பாயாக நடித்துள்ளார். படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்பை கூட்டிய நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி படம் வரும் ஜனவரி மாதம் 19ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆக உள்ளது. அதற்கான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளனர்.