வெறித்தனமான லுக்கில் மோகன்லால்.. ‘மலைக்கோட்டை வாலிபன்’ ஃப்ர்ஸ்ட் லுக் !

MalaikottaiVaaliban

மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள ‘மலைடக்கோட்டை வாலிபன்’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘மலைக்கோட்டை வாலிபன்’. இந்த படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக மராத்தி நடிகையான சோனாலி குல்கர்னி நடித்து வருகிறார். இவர்களுடன் ஹரீஷ் பெரேடி,  டேனிஷ் சேட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

MalaikottaiVaaliban

‘ஆமென்’, ‘அங்காமலி டைரீஸ்’, ‘ஈ மா யூ‘, ‘ஜல்லிக்கட்டு’ உள்ளிட்ட படங்களை இயக்கிய லிஜோ ஜோஸ் பெலிச்சேரி இப்படத்தை இயக்கி வருகிறார்.  இந்த படத்தை ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தானில் தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நீண்ட ஷெட்டியூல் சமீபத்தில் நிறைவுபெற்றது. 

மலையாளம் மற்றும் தமிழ் என இருமொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. மோகன்லால் வெறித்தனமான லுக்கில் இருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் மல்யுத்த வீரராக மோகன்லால் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Share this story