‘தங்கலான்’ படத்தை தொடர்ந்து பிரபல நடிகருடன் இணையும் மாளவிகா – அசத்தல் அப்டேட்.

photo

பிரபல நடிகை மாளவிகா மோகனன் நடிகர் சியான் விக்ரம் மற்றும் இயக்குநர் பா.ரஞ்சித் கூட்டணியில் உருவாகிவரும் ‘தங்கலான்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்த படத்தை முடித்துக்கொண்டு மாளவிகா அடுத்து ஒரு பெரிய நடிகருடன் நடிக்க உள்ளதாக அவரே பேட்டி ஒன்றில் உறுதிபடுத்தியுள்ளார்.

photo

கோலிவுட்டில் அறிமுகமான முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் நடித்து அசத்தினார், தொடர்ந்து இளையதளபதி விஜய்க்கு ஜோடியாக ‘மாஸ்டர்’ படத்தில் நடித்தார். அடுத்து தனுஷுடன் சிறப்பான நடிப்பை மாறன் படத்தில் வெளிப்படுத்திய மாளவிகா தற்போது பா. ரஞ்சித்தின், ‘தங்கலான்’ படத்திற்காக கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

photo

தங்கலான் படத்தை முடித்துவிட்டு அடுத்தபடியாக, ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றிகண்ட பாகுபலி பட ஹீரோவான 'பிரபாஸ்' உடன் ஜோடி போட உள்ளாராம் மாளவிகா மோகனன். இந்த தகவலை அவரே உறுதிப்படுத்திய நிலையில் ரசிகர்கள் படத்தின் இயக்குநர் யார்? மற்ற நடிகர்கள் யார்? கதைகளம் ஆகிய  அறிவிப்பிற்காக காத்துள்ளனர்.

photo

Share this story