பிரபல மலையாள நடிகர் இன்னொசென்ட் மருத்துவமனையில் அனுமதி...

innocent

பிரபல மலையாள நடிகர் இன்னொசென்ட் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தென்னிந்திய சினிமா உலகில் பிரபல நடிகராக இருப்பவர் இன்னொசென்ட். மலையாள நடிகரான அவர், காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர். மலையாளத்தை தாண்டி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் சுமார் 750-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முக திறமைக் கொண்டு செயல்பட்டு வருகிறார். 

innocent

சினிமாவிற்கு பிறகு அரசியல் வாழ்விலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவருக்கு திரையுலகில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சினிமாவிலும், அரசியலிலும் பிசியாக பணியாற்றி வந்த அவர், கடந்த 2012-ஆம் ஆண்டு தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இந்த நோய் ஆரம்ப நிலையில் இருந்ததால் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்தார். 

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர், கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு செய்யப்பட்ட பரிசோதனையில் அவருக்கு மீண்டும் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இன்னொசென்ட விரைவில் குணமடைய வேண்டி ரசிகர்களும், திரையுலகினரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். 

 

Share this story