பிரபாஸ் படத்தில் இணையும் மலையாள நடிகர்... குவியும் நட்சத்திரங்களால் எகிறும் எதிர்பார்ப்பு !

dulquer salmaan

பிரபாஸின் ‘கல்கி 2898 AD’ படத்தில் பிரபல மலையாள நடிகர் ஒருவர் இணையவுள்ளதாக வெளியாகியுள்ளது. 

உலக அளவில் கவனம் பெறும் படமாக உருவாகி வருகிறது பிரபாஸின் ‘கல்கி 2898 AD’. தேசிய விருதுபெற்ற இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் ஹாலிவுட் தரத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.  சயின்ஸ் ஃபிக்ஷன் ஆக்ஷன் த்ரில்லரில் உருவாகி வரும் இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

dulquer salmaan

இந்த படத்தில் பிரபாஸுடன் இணைந்து உலக நாயகன் கமலஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே, திஷா பதானி, பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பான் இந்தியா திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது. சர்வதேச அளவில் உருவாகும் இப்படம் 10 மொழிகளில் தயாராகி வெளியாகவுள்ளது. 

dulquer salmaan

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறப்புத் தோற்றத்தில் நடிக்க வைக்க அவரிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பிரபாஸ் படத்தில் துல்கர் சல்மான் நடிக்கவிருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story