பிரபல மலையாள இயக்குநர் கே.ஜி.ஜார்ஜ் மறைவு
1695549648088
மூத்த மலையாள இயக்குநர் கே.ஜி.ஜார்ஜ் 77 வயதில் உயிரிழந்தார்.
குளக்கட்டில் கீவர்கீஸ் ஜார்ஜ் கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் பிறந்தவர். இயக்குநர் ராம் கரியத்திடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த அவர், 1975-ம் ஆண்டு வெளியான 'ஸ்வப்னதானம்' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படம் சிறந்த மலையாளப் படத்துக்கான தேசிய திரைப்பட விருதை வென்றது. தொடர்ந்து அவர் இயக்கிய ஊழ்க்கடல், மேளா, யவனிகா ஆகிய திரைப்படங்கள் பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றன. இதுவரை 9 கேரள அரசு விருதுகளை ஜார்ஜ் வென்றுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவர், இன்று கொச்சியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.