மலையாள திரைப்பட தயாரிப்பாளர் மரணம்
1706200769094
பிரபல மலையாள திரைப்பட தயாரிப்பாளர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
மலையாள திரைப்பட தயாரிப்பாளர் நோபல் ஜோஸ் (54) கொச்சியில் மாரடைப்பால் காலமானார். இவரது இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை திருப்புனித்துறையில் நடைபெறும். அனூப் மேனன் நடித்த 'என்டே மெழுதிரி அதழங்கள் ', விஷ்ணு உன்னிகிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த 'கிருஷ்ணன்குட்டி பனி தொடங்கி' மற்றும் திலீஷ் போத்தன் மற்றும் விஷ்ணு உன்னிகிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள 'ஷாலமன்' உள்ளிட்ட படங்களை இவர் தயாரித்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.