பிறந்தநாள் கொண்டாடும் மலையாள நட்சத்திரம்- திரைப்பிரபலங்கள் வாழ்த்து

பிறந்தநாள் கொண்டாடும் மலையாள நட்சத்திரம்- திரைப்பிரபலங்கள் வாழ்த்து
பிரபல மலையாள நடிகரும், இயக்குநருமான பிருத்விராஜூக்கு லைகா சுபாஸ்கரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
லைக்கா நிறுவனம் முதன்முதலாக மலையாள மொழியில் தயாரிக்கும் திரைப்படம் லூசிபர் 2 எம்புரான். இந்த படத்தை பிருத்விராஜ் இயக்குகிறார். இப்படத்தின் முதல் பாகம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, தற்போது இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமாக லைக்கா, மலையாள திரையுலகில் ஆசிர்வாத சினிமாஸூடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.
படத்தில் மலையாள பிரபலம் மோகன்லால் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. படத்திற்கு தீபக் தேவ் இசை அமைக்கிறார். மலையாளம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் படம் உருவாகி வருகிறது. இந்நிலையில், இன்று பிறந்தாள் கொண்டாடும் பிருத்விராஜூக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன்படி, லைக்கா தயாரிப்பாளர் சுபாஸ்கரனும் அவருக்கு தொலைபேசி மூலம் அழைத்து வாழ்த்து கூறினார்.