மைக்கேல் ஜாக்சன் வாழ்க்கை வரலாறு படமாகிறது

மைக்கேல் ஜாக்சன் வாழ்க்கை வரலாறு படமாகிறது

கிங்க் ஆஃப் பாப் என்ற புகழுக்கு சொந்தக்காரர். நடனக் கலையை புதிய பரிணாமத்துக்கு கொண்டு சென்றவர். சிறந்ததோர் பாடல் ஆசியராகவும் திகழ்ந்தவர். இத்தகைய பெருமைகளுக்கு உரியவர் மைக்கேல் ஜாக்சன். அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் கடந்த 1958-ம் ஆண்டு ஆகஸ்ட் 29-ம் தேதி பிறந்த இவரின் முழு பெயர் மைக்கேல் ஜோசப் ஜாக்சன் என்பதாகும். தாமே பாடல்களை எழுதி, இசையமைத்து நடனமாடும் வித்தகராக விளங்கிய மைக்கேல் ஜாக்சனின், புதுமையான நடனத்திற்கு மயங்காதவர்களே இல்லை எனலாம்.. அவரது தனித்துவமிக்க திறமைக்கு மற்றுமோர் சாட்சி, அவர் முன்னெடுத்த Anti Gravity Lean எனப்படும் தரையை நோக்கி சாயும் நடன உத்தி. மாபெரும் கலைஞனான மைக்கேல் ஜாக்சன், கடந்த 2009-ம் ஆண்டு இதேநாளில்தான் உயிரிழந்தார். 

மைக்கேல் ஜாக்சன் வாழ்க்கை வரலாறு படமாகிறது

இந்நிலையில், மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்குகின்றனர். ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் பலர் இதில் நடிக்க உள்ளனர். 

Share this story