வெளியானது ‘மைக்கேல்’ படத்தின் மாஸ் புகைப்படங்கள்!.....உற்சாகத்தில் ரசிகர்கள்.

photos

சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள 'மைக்கேல்' படத்தின் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது

photos

தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் சந்தீப் கிஷன், தற்போது 'மைக்கேல்' படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கதாநாயகியாக திவ்யானா கெளஷிக் நடிக்கிறார் இவர்களுடன் இந்த படத்தில் இயக்குனர் கெளதம் மேனன் மற்றும் நடிகை வரலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

photos

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகும் இந்த படத்தை இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி வருகிறார். ஆக்ஷன் அதிரடி திரைப்படமாக உருவாகும் இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல் எல் பி தயாரித்து உருவாகிறது‌. சாம் சி எஸ் படத்திற்கு இசையமைக்கிறார்.

photos

 இந்த நிலையில் படத்தின் டீசர் மற்றும் படப்பிடிப்பு தளத்திலிருந்து நடிகர்களின் புகைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்பொழுது படத்திலிருந்து சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி, கவுத்தம் மேனன்,  திவ்யானா கெளஷிக் ஆகியரின் கதாப்பாத்திரம் சார்ந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

photos

Share this story