ரூ. 50 கோடி வசூலித்த ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி’.

photo

அனுஷ்காவின் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி’ திரைப்படம் ரூ. 50 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

photo

இயக்குநர் மகேஷ் பாபு இயக்கத்தில் நடிகை அனுஷ்கா ஷெட்டி மற்றும் நவின் பொலி ஷெட்டி இருவரும் இணைந்து நடித்துள்ள படம் ‘மிஸ் ஷெட்டி, மிஸ்டர் பொலி ஷெட்டி’. யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படத்திற்கு ரதன் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியானது.

திருமணம் செய்யாமல் குழந்தை பெற நினைக்கும் பெண்ணின் கதையை காமெடி கலந்து படத்தில் கூறியுள்ளனர். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வாசூலிலும் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த நிலையில் படத்தின் வசூல் ரூ.50 கோடியை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். கடைசியாக அனுஷ்கா நடிப்பில் ‘நிஷப்தம்’ என்ற படம் வெளியானது, அதன் பின்னர் இந்த படம் நீண்ட இடைவேளைக்கு பின்னர் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

Share this story