மீண்டும் இணைந்த மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணி.. த்ரிஷ்யம் 3 ?... ராம் சீரிஸ் படமா ?
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையாளத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். கடந்த சில வருடங்களில் அவர் நடிப்பில் வெளியான த்ரிஷ்யம், ராம் சீரிஸ் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. அந்த வகையில் மீண்டும் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கவுள்ளார்.
மலையாளத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தை ஆசீர்வாத் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
மோகன்லால் மற்றும் ஜீத்து ஜோசப் கூட்டணியில் வெளியான த்ரிஷ்யம் திரைப்படம் உலக அளவில் பிரபலமானது. மலையாளத்தில் ஹிட்டடித்த அந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் ஜப்பானிய மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டு வெற்றிப்பெற்றது. இதையடுத்து இரண்டாம் பாகமும் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் மூன்றாம் பாகத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள படம் த்ரிஷ்யம் படமோ அல்லது ராம் சீரிஸ் படங்களோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.