மோகன்லாலுக்கு ஜோடியாகும் மராத்தி நடிகை... புதிய அப்டேட் !

malaikkottai valipan

மோகன்லால் நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக மராத்தி நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

மலையாளத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். அவர் நடிப்பில் அடுத்தடுத்த திரைப்படங்கள் உருவாகி வருகிறது. அந்த வரிசையில் தற்போது மோகன்லால் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் 'மலைக்கோட்டை வாலிபன்'. இந்த படத்தில் மல்யுத்த வீரராக மோகன்லால் நடிக்கவுள்ளார்.

 malaikkottai valipan

 ‘ஆமென்’, ‘அங்காமலி டைரீஸ்’, ‘ஈ மா யூ‘, ‘ஜல்லிக்கட்டு’ உள்ளிட்ட படங்களை இயக்கிய லிஜோ ஜோஸ் பெலிச்சேரி இப்படத்தை இயக்கியுள்ளார். தற்போது இந்த படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதிக்குள் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

malaikkottai valipan

தற்போது இந்த படத்தின் நடிகர், நடிகை தேர்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கன்னட காமெடி நடிகர் டேனிஷ் சேட் இந்த படத்தில் இணைந்தார். இந்நிலையில் மராத்தி நடிகையான சோனாலி குல்கர்னி இந்த படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Share this story