மோகன்லால் நடிப்பில் மலைக்கோட்டை வாலிபன் டீசர் ரிலீஸ்
மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘மலைக்கோட்டை வாலிபன்’. ‘ஆமென்’, ‘அங்காமலி டைரீஸ்’, ‘ஈ மா யூ‘, ‘ஜல்லிக்கட்டு’ உள்ளிட்ட படங்களை இயக்கிய லிஜோ ஜோஸ் பெலிச்சேரி இப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக மராத்தி நடிகையான சோனாலி குல்கர்னி நடித்து வருகிறார். இவர்களுடன் ஹரீஷ் பெரேடி, டேனிஷ் சேட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மலையாளம் மற்றும் தமிழ் என இருமொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. மல்யுத்த வீரராக மோகன்லால் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் ராஜஸ்தானில் நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.