மோகன்லால் நடிக்கும் பாரோஸ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

மோகன்லால் நடிக்கும் பாரோஸ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் பரோஸ் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

மலையாளத்தில் முன்னணி நடிகராகத் திகழ்ந்து வரும் மோகன்லால் பர்ரோஸ் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இது அவரது கனவுத் திரைப்படம் என்று கூட சொல்லலாம். இந்தப் படம் 400 ஆண்டுகளாக வாஸ்கோ டா காமாவின் மதிப்புமிக்க பொக்கிஷங்களின் பாதுகாவலரான போர்த்துகீசிய புராண நபர் பரோஸ் என்பவரின் வாழ்க்கையை அடிப்டையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. மை டியர் குட்டிச்சாதன் என்ற படத்தின் வாயிலாக இந்திய ரசிகர்களுக்கு 3D டெக்னாலஜியை அறிமுகப்படுத்திய ஜிஜோ புன்னூஸ் இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதுகிறார். ஆசீர்வாத் சினிமாஸ் சார்பில் ஆண்டனி பெரும்பாவூர் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார். ஏஆர் ரஹ்மானின் சிஷ்யன் லிடியன் நாதஸ்வரம் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி  இருக்கிறார்.

மோகன்லால் நடிக்கும் பாரோஸ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இப்படம், அடுத்த ஆண்டு மார்ச் 28-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 
 

Share this story