மகேஷ் பாபு மகள் சித்தாரா பெயரில் பண மோசடி

மகேஷ் பாபு மகள் சித்தாரா பெயரில் பண மோசடி

தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் மகேஷ் பாபு. மிடுக்கான தோற்றம், கம்பீரமான பார்வை என ஆக்ஷன் ஹீரோவாகவே திரையில் தோன்றிய மகேஷ்பாபு, நடிப்பால் மட்டுமின்றி தனது அன்பான குணத்தாலும் அதிக ரசிகர்கள் ரசிகர்களை கவர்ந்தவர். பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் மகனான இவர், தெலுங்கு சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். ரீமேக் படங்களில் நடிப்பதில்லை என்பதை கொள்கையாக வைத்துள்ள மகேஷ் பாபு, தமிழில் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ஸ்பைடர் திரைப்படத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து வரும் மகேஷ் பாபுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 

மகேஷ் பாபு மகள் சித்தாரா பெயரில் பண மோசடி

மகேஷ் பாபு நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் குண்டூர் காரம். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், அவரது மகள் சித்தாரா பெயரில் சமூக வலைதளங்களில் போலிக்கணக்குகள் தொடங்கி பண மோசடி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக போலீஸிலும் புகார் அளித்துள்ளனர். 
 

Share this story