நாகசைதன்யா பிறந்தநாளில் ‘என்சி 22’ ஃப்ர்ஸ்ட் லுக்... துப்பாக்கிகளுடன் இருக்கும் அசத்தல் போஸ்டர் வெளியீடு !

nc22

நாகசைதன்யா நடிப்பில் உருவாகி வரும் ‘என்சி 22’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தெலுங்கில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் நாகசைதன்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘என்சி 22’. இந்த படத்தை மாநாடு, மன்மத லீலை ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த படத்தில் நாகசைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இவர்களுடன் அரவிந்தசாமி, பிரியாமணி, விஸ்வநாத், சம்பத் ராஜ், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

nc22

இந்த படத்திற்கு இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்து வருகின்றனர். பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

nc22

இந்நிலையில் நடிகர் நாகசைதன்யா நாளை தனது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். இதையொட்டி நாளை இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் போஸ்டர் மற்றும் முக்கிய அப்டேட் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மிரட்டலான போஸ்டர் மூலம் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் ஒருவர் மீது பலர் துப்பாக்கி வைத்திருப்பது போல் உள்ளது. இது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story