மீனவராக மாறிய நாகசைதன்யா.. புதிய படத்தின் அப்டேட்

naga chaitanya

தெலுங்கு நடிகர் நாகசைதன்யா நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. 

பிரபல தெலுங்கு நடிகராக இருப்பவர் நாகசைதன்யா. அவர் நடிப்பில் வெளியான ‘மஜிலி’, ‘லவ் ஸ்டோரி’ உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. ஆனால் சமீபகாலமாக அவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து சறுக்கலை சந்தித்து வருகிறது. அந்த வகையில் கடைசியாக வெளியான ‘கஸ்டடி’ திரைப்படமும் போதிய வெற்றியை பெறவில்லை. 

naga chaitanya

அதனால் அடுத்து ஒரு வெற்றியை கொடுக்கவேண்டும் என்பதற்காக போராடி வருகிறார் நாகசைதன்யா. அதற்காக தெலுங்கில் சூப்பர் ஹிட்டடித்த ‘கார்த்திகேயா’ படத்தின் இயக்குனர் சந்து மாண்டேடியுடன் நாகசைதன்யா கூட்டணி அமைத்துள்ளார். இந்த படத்தில் நாகசைதன்யா மீனவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் குஜராத்தில் நடந்த ஒரு உண்மை மீனவரின் காதல் கதையை மையப்படுத்தி உருவாகிறது. இதற்காக மீனவர்களின் வாழ்க்கை முறையை படக்குழுவினர் ஆராய்ந்து வருகின்றனர். இந்த படத்திற்காக அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 


 

Share this story