நாகசைதன்யாவிற்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்.. ஒர்க்கவுட் ஆகுமா இந்த புதிய கூட்டணி !

naga chaitanya

நாகசைதன்யாவின் புதிய படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கில் பிரபல நடிகராக இருக்கும் நாகசைதன்யாவின் கடைசி இரண்டு படங்களான ‘தேங்க் யூ’, ‘கஸ்டடி’ ஆகியவை படுதோல்வியை சந்தித்துள்ளன. அதனால் அடுத்த படத்தை கண்டிப்பாக வெற்றிப்படமாக்க நாகசைதன்யா கடுமையாக உழைத்து வருகிறார். அதனால் அடுத்த படத்திற்கான தேர்வை மிகவும் நிதானமாக செய்து வருகிறார். 

naga chaitanya

அந்த வகையில் ‘கார்த்திகேயா’, ‘கார்த்திகேயா 2’ ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய சந்து மொண்டேட்டி, நாகசைதன்யாவின் அடுத்த படத்தை இயக்குகிறார். தெலுங்கு, தமிழ், இந்தி என 5 மொழிகளில் பான் திரைப்படமாக உருவாகும் இந்த படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 

naga chaitanya

இந்த படத்திற்கான முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் கதாநாயகியாக அனுபமா பரமேஸ்வரன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் சில காரணங்களால் அவர் வெளியேறிய நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. 

 

Share this story