"24 நேரத்தில் நடைபெறும் கதைக்களம்" - 'கஸ்டடி' குறித்து சுவாரஸ்சிய தகவலை வெளியிட்ட வெங்கட் பிரபு !
நாகசைதன்யா நடிப்பில் உருவாகும் 'கஸ்டடி' படத்தின் சவாரஸ்சிய தகவல்களை இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கஸ்டடி'. தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நாகசைதன்யா இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இவர்களுடன் அரவிந்த் சாமி, பிரேம்ஜி, சரத்குமார், வெண்ணிலா கிஷோர், பிரியாமணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜாவும், இளையராஜாவும் இணைந்து இசையமைத்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இந்த படம் வரும் மே 12-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி நாளை 'கஸ்டடி' படத்தின் டிரெய்லர் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் இன்று நடைபெற்றது. இதில் பேசிய இயக்குனர் வெங்கட் பிரபு, இந்த படம் 24 நேரத்தில் நடைபெறும் கதைக்களம் கொண்டது. இந்த படத்திற்காக இரண்டு காஸ்டியூம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. புதிய முயற்சியாக இதை முயற்சித்துள்ளேன். பொதுவாக படத்தின் க்ளைமேக்ஸில் வில்லனை ஹீரோ கொன்றுவிடுவார். ஆனால் இந்த படத்தில் வேறு வழியின்றி வில்லனை பாதுகாப்பார். ஒவ்வொரு ஆக்ஷன் காடசியிலும் ஒரு எமோஷன் கலந்திருந்திருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
.