நாகசைதன்யா நடிப்பில் ‘கஸ்டடி’... வித்தியாசமான டீசர் ப்ரோமோ வெளியீடு !

custoday

நாகசைதன்யா நடிப்பில் உருவாகி வரும் ‘கஸ்டடி’ படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் தெலுங்கு நடிகர் நாகசைதன்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கஸ்டடி’. இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இவர்களுடன் அரவிந்த் சாமி, பிரேம்ஜி, சரத்குமார், வெண்ணிலா கிஷோர், பிரியாமணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

custoday

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தை சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜாவும், இளையராஜாவும் இணைந்து இசையமைத்து வருகின்றனர். இந்த படத்தில் நாகசைதன்யா போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

custoday

இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. இதையடுத்து தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் மே 12-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் டீசர் வரும் மார்ச் 16-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி வெளியாகியுள்ள டீசர் ப்ரோமோவில் தண்ணீர் அடியில் நாகசைதன்யா ஜெயிலில் இருக்கும் வித்தியாசமாக காட்சி வெளியிடப்பட்டுள்ளது. இது டீசருக்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story