நாளை சர்ப்ரைஸ் காத்திருக்கு... வெங்கட் பிரபு கொடுத்த அப்டேட்

வெங்கட் பிரபு மற்றும் நாகசைதன்யா கூட்டணியில் உருவாகும் படத்தின் முக்கிய அப்டேட் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னணி இயக்குனராக வெங்கட் பிரபு, மாநாடு, மன்மத லீலை ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு நேரடியாக தெலுங்கு படம் ஒன்றை இயக்கி வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படத்தை தெலுங்கு நடிகர் நாகசைதன்யா ஹீரோவாக நடிக்கிறார்.
இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்த படத்திற்கு இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்து வருகின்றனர். பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாகசைதன்யா பிறந்தநாளையொட்டி ‘என்சி 22’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகவுள்ளது. இது குறித்து பேசியுள்ள வெங்கட்பிரபு, வரும் நவம்பர் 22-ஆம் தேதி நாகசைதன்யா பிறந்தநாளையொட்டி ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என கூறியுள்ளார். இது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
#NC22Celebrations Begins Tomorrow 🥳❤️🔥
— Nikil Murukan (@onlynikil) November 21, 2022
Stay Tuned for the Enigmatic @chay_akkineni's #NC22 Pre Look Tomorrow at 11:35 AM 🤩🔥@vp_offl @IamKrithiShetty @thearvindswami @ilaiyaraaja @thisisysr @SS_Screens @srinivasaaoffl #Priyamani @realsarathkumar @srkathiir #VP11 pic.twitter.com/BFZGKyRtHZ