“சாவு என்னை துரத்திட்டே இருக்குன்னு எனக்கு தெரியும்”... மிரட்டலான ‘கஸ்டடி’ டீசர் வெளியீடு !

நாகசைதன்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கஸ்டடி’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
‘மாநாடு’ படத்திற்கு வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கஸ்டடி’. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வரும் இப்படத்தில் தெலுங்கு நடிகர் நாகசைதன்யா கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இவர்களுடன் அரவிந்த் சாமி, பிரேம்ஜி, சரத்குமார், வெண்ணிலா கிஷோர், பிரியாமணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்து இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜாவும், இளையராஜாவும் இணைந்து இசையமைத்து வருகின்றனர். வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. தற்போது இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் இப்படத்தின் டப்பிக்கை நாகசைதன்யா முடித்தார்.
இந்த படம் வரும் மே 12-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் போலீஸ் கதாபாத்திரத்தில் நாகசைதன்யா நடித்துள்ளார். மிரட்டலான வில்லனாக அரவிந்தசாமி காட்டப்பட்டுள்ளது. இந்த டீசர் படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Truth is Conviction, Truth is Legion??
— Srinivasaa Silver Screen (@SS_Screens) March 16, 2023
That TRUTH is in our #Custody ??#CustodyTeaser ?????
Telugu?? https://t.co/pfFungH2xu
Tamil ?? https://t.co/l8UmS2Febg#CustodyOnMay12@chay_akkineni @vp_offl @IamKrithiShetty @thearvindswami @ilaiyaraaja @thisisysr @SS_Screens pic.twitter.com/db32abzVoc