அடித்து நொறுக்கும் நாகசைதன்யா.. ‘கஸ்டடி’ டிரெய்லர் வெளியீடு !

நாகசைதன்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கஸ்டடி’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் தெலுங்கு நடிகர் நாகசைதன்யா நடிப்பில் ‘கஸ்டடி’ திரைப்படம் உருவாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தை சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் வரும் மே 12-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து ‘கஸ்டடி’ படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் 24 நேரத்தில் நடைபெறும் கதைக்களம் கொண்டது.
இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இவர்களுடன் அரவிந்த் சாமி, பிரேம்ஜி, சரத்குமார், வெண்ணிலா கிஷோர், பிரியாமணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜாவும், இளையராஜாவும் இணைந்து இசையமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Here it is ! the trailer of #Custody
— chaitanya akkineni (@chay_akkineni) May 5, 2023
Can’t wait for you all to experience the hunt in theatre’s on May 12th
Telugu - https://t.co/uOriDVxa42
Tamil - https://t.co/GkiQwNjHut#CustodyTrailer#CustodyOnMay12@realsarathkumar @vp_offl @thearvindswami @ilaiyaraaja @thisisysr… pic.twitter.com/3fFjRyuYOH