சமந்தாவிடம் நலம் விசாரித்தாரா நாகசைதன்யா ?.. தீயாய் பரவும் தகவல் !

samantha

நடிகை சமந்தாவிடம் அவரது முன்னாள் கணவர் நாகசைதன்யா நலம் விசாரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான சமந்தா, கடந்த 2017-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் பிசியாக நடித்து வந்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு இருவரும் பிரிவதாக பரஸ்பரம் அறிவித்தனர்.

samantha

தனது கணவருடனான பிரிவுக்கு பிறகு நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையே அரிய வகை தோல் நோயால் தான் அவதிப்படுவதாகவும், அதற்கான சிகிச்சையில் தற்போது ஈடுபட்டு வருவதாகவும், விரைவில் நலமுடன் திரும்புவேன் என்று சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்தார். அவருக்கு பலரும் ஆறுதல் கூறி வந்தனர். 

samantha

அந்த வகையில் சமந்தாவின் மைத்துனர் அகில், விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கமெண்ட் செய்திருந்தார். இதையடுத்து சமந்தாவை சந்தித்து நாகசைதன்யா எப்போது நலம் விசாரிப்பார் என ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் சமந்தாவிடம் போன் மூலம் நாகசைதன்யா நலம் விசாரித்ததாக தகவல் ஒன்று தீயாய் பரவி வருகிறது. இந்த உரையாடலின் போது என்ன உதவி வேண்டுமானாலும் செய்யத் தயார் என நாக சைதன்யா கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.   

 

 

Share this story