நானி படத்தில் இணைந்த நடிகை ஸ்ருதிஹாசன்... புதிய படத்தின் அப்டேட் !

nani 30

 நானியின் 30வது படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் உருவாகி வெளியான மாபெரும் வெற்றிப்படம் ‘தசரா’. நிலக்கரி சுரங்க பின்னணியில் உருவாகியிருந்த இந்த படத்தில் தர லோக்கலாக நானி நடித்திருந்தார். வித்தியாசமான தோற்றத்தில் அவர் இந்த படத்தில் நடித்திருந்தது அனைவரிடையே பாராட்டுக்களை குவித்தது. 

nani 30

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தனது 30வது படத்தில் நானி நடித்து வருகிறார். வைர என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை ஷூர்யுவ் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ‘சீதாராமம்’ படத்தின் மூலம் பிரபலமான நடிகை மிருணாள் தாகூர் கதாநாயகியாக நடித்து வருகிறார். ‘ஹிருதயம்’ படத்தின் மூலம் பிரபலமான இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். 

nani 30

இப்படம் வரும் டிசம்பர் 21-ஆம் தேதி கிறிஸ்துமசையொட்டி வெளியாக உள்ளது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார். முதல் முறையாக நானியுடன் ஸ்ருதிஹாசன் இணைந்து நடிப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

Share this story