ஸ்ரீகாந்த் ஒடலா இயக்கத்தில் நானி.. மீண்டும் இணையும் ‘தசரா’ கூட்டணி !

nani

இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடலா இயக்கத்தில் மீண்டும் நடிகர் நானி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நானி நடிப்பில் மிரட்டலாக உருவாகி வெளியான திரைப்படம் ‘தசரா’. இந்த படத்தில் கதாநாயகியாக வெண்ணிலா கதாபாத்திரத்தில் கிராமத்து பெண்ணாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.  எஸ்.எல்.வி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் உருவாகி வெளியானது.  சந்தோஷ் நாராயணனின் இசை இந்த படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

nani

நிலக்கரி பின்னணியில் இருக்கும் ஒரு கிராமத்தில் நடக்கும் நிகழ்வை வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. தனது நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி வாங்கும் தரணியின் கதைதான் இந்த படம். வெறிப்பிடித்த மிருகமாய் மாறும் தரணியின்(நானி) கதாபாத்திரத்தின் மிரட்டலான நடிப்பு ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இயக்குனர் ஸ்ரீகாந்த் ஓடிலா இயக்கத்தில் உருவான இந்த படம் கடந்த மார்ச் 30-ஆம் தேதி வெளியானது. 

nani

சுமார் 65 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 100 கோடி வசூல் சாதனையை படைத்தது. இந்த வெற்றிக்கு பிறகு ஸ்ரீகாந்த் ஒடலா இயக்கத்தில் மீண்டும் நானி நடிக்கவுள்ளார். இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகவிருக்கும் இந்த படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. 

 

 

Share this story