தாறுமாறு செய்துள்ள நானி... ‘தசரா’ மூன்றாவது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ?

dasara

 நானி நடிப்பில் உருவாகியுள்ள ‘தசரா’ படத்தின் 3வது நாள் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் நானி, யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் அவரின் மிரட்டலான நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தசரா’. இந்த படத்தில் கதாநாயகியாக வெண்ணிலா கதாபாத்திரத்தில் கிராமத்து பெண்ணாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.  எஸ்.எல்.வி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் உருவாகி வெளியாகியுள்ளது. 

dasara

இயக்குனர் ஸ்ரீகாந்த் ஓடிலா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் கடந்த மார்ச் 30-ஆம் தேதி வெளியானது. இந்த படத்திற்கு பல மொழிகளில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் திரையரங்கில் கொண்டாடும் படமாக உருவாகியுள்ள இந்த படம் மூன்றே நாளில் 71 கோடியை தாண்டியுள்ளது. இன்னும் விடுமுறை வருவதால் இந்த வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. 

dasara

சந்தோஷ் நாராயணனின் இசை இந்த படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. நிலக்கரி பின்னணியில் இருக்கும் ஒரு கிராமத்தில் நடக்கும் நிகழ்வை வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. தனது நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி வாங்கும் தரணியின் கதைதான் இந்த படம். வெறிப்பிடித்த மிருகமாய் மாறும் தரணியின்(நானி) கதாபாத்திரத்தின் மிரட்டலான நடிப்பு ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. 

 

Share this story