ஓடிடியில் வெளியாகும் நானியின் ‘தசரா’.. ஒளிப்பரப்பு தேதி குறித்த அப்டேட்

dasara

நானி நடிப்பில் உருவான ‘தசரா’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

தெலுங்கு நடிகர் நானி மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘தசரா’. இருவருமே இந்த படத்தில் வித்தியாச வேடங்களில் நடித்துள்ளனர். இது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இயக்குனர் ஸ்ரீகாந்த் ஓடிலா இப்படத்தை இயக்கியிருந்தார். 

dasara

நிலக்கரி சுரங்க பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் அங்கு வாழும் தொழிலாளர்கள் படும் இன்னல்களை வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது. எஸ்.எல்.வி சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் உருவாகி வெளியானது. 

நண்பனின் கொலைக்கு காரணமானவர்களை பழிக்கு பழி வாங்கும் திரைப்படம் இந்த படம். ரத்தம் தெறிக்க உருவாகியிருந்த இப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் கடந்த மாதம் வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்றுள்ள இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் ஏப்ரல் 27-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடித் தளத்தில் வெளியாகிறது. இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

Share this story