காதலர் தினத்தில் ‘தசரா’ செகண்ட் சிங்கிள்... நானி படத்தின் புதிய அப்டேட்

தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகராக இருக்கும் நடிகர் நானி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தசரா’. இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா, ஜரீனா வஹாப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தை ஸ்ரீகாந்த் ஓடிலா இயக்கி வருகிறார். எஸ்.எல்.வி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் உருவாகிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இப்படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நானி மாறுப்பட்ட நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காதலர் தினத்தையொட்டி வரும் பிப்ரவரி 13-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Let's Celebrate this Valentine's Day with the Heartbreak Anthem ??#Dasara Second Single #OriVaari on February 13th ?????#DasaraSecondSingle
— SLV Cinemas (@SLVCinemasOffl) February 9, 2023
Natural Star @NameisNani @KeerthyOfficial @odela_srikanth @Music_Santhosh @sathyaDP @NavinNooli @saregamasouth pic.twitter.com/1V2Nn7YOgN